தாலியுடன் பட புரமோஷனில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்; புகைப்படங்கள் வைரல்!

keerthisuresh

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்தவுடன் தான் நடித்த முதல் பாலிவுட் படமான 'பேபி ஜான்' பட ப்ரமோஷனில் கலந்து கொண்டுள்ளார். பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி நண்பரான ஆண்டனி தட்டிலை கடந்த வாரம் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். கீர்த்தி சுரேஷ் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

மேலும் நடிகர் விஜய் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். துபாயில் தொழில் செய்து வரும் ஆண்டனி தட்டில் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆவார். கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகை ராஷி கண்ணா, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்தவுடன் கீர்த்தி சுரேஷ் தான் நடித்துள்ள முதல் பாலிவுட் படமான ’பேபி ஜான்’ பட புரமோஷனில் கலந்து கொண்டுள்ளார். இந்த ப்ரமோஷனில் கதாநாயகன் வருண் தவான், வாமிகா கப்பி ஆகியோரும் கலந்து கொண்டனர்


அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’பேபி ஜான்’ திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 25ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் புரமோஷனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலியுடன் சிவப்பு நிற மாடர்ன் உடையில் புரமோஷனில் கலந்து கொண்டார். பொதுவாக திருமணம் ஆனவர்கள் உடனேயே வெளிநாடுகளுக்கு ஹனிமூன் செல்வார்கள் எனவும், ஆனால் கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகையாக இருந்தும் பொறுப்பாக புரமோஷனில் கலந்து கொண்டுள்ளார் என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்

Share this story