‘NTR31’ படத்திற்காக மீண்டும் இணையும் கே.ஜி.எப் பிரபலம்?

jntr31

NTR31 படத்திற்காக சலார் படக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடைசியாக தேவரா எனும் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம் வார் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இதைத்தொடர்ந்து இவர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு NTR31 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ராமராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

prasanth neel

இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை ருக்மினி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், NTR31 படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப், சலார் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story