அவரை தூக்கி வெச்சு கொண்டாடணும்.. லப்பர் பந்து தினேஷை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்..!

shankar

கேம் சேஞ்சர் பட இயக்குனரான ஷங்கர், நடிகர் தினேஷை மனதார பாராட்டியுள்ளார்.ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான படங்களில் இந்தியன் 2 திரைப்படத்தை தவிர மற்ற அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். வெற்றிப்படங்களாக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு அவரின் படங்கள் கொண்டு சென்றன. தொழில்நுட்பம் ரீதியிலும் வசூல் ரீதியிலும் ஷங்கரின் படங்கள் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றன. மற்ற மொழி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் ஷங்கரின் படங்களை பார்த்து வியந்தார்கள். அந்தளவிற்கு தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இயக்குனர் ஷங்கர் தற்போது ஒரு கம்பேக்கிற்காக காத்துகொண்டு இருக்கின்றார். அவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் 2 மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்தது.


எனவே தற்போது அவர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற காத்துகொண்டு இருக்கின்றார் ஷங்கர். இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஷங்கர் செம பிசியாக இருக்கின்றார். அமெரிக்கா முதல் ஆந்திரா, தமிழ்நாடு என சுற்றி சுற்றி கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டார் ஷங்கர். அப்படி ஒரு பேட்டியில் ஷங்கர், பிரபல நடிகர் தினேஷை மனதார பாராட்டியுள்ளார். அட்டக்கத்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தினேஷ் தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, ஒருநாள் கூத்து, இரண்டாம் உலகப்போர் என தரமான படங்களாக நடித்து வருகின்றார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான லப்பர் பந்து திரைப்படத்திலும் தன் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் தினேஷ்.



அட்டகத்தி தினேஷ் என அழைக்கப்பட்ட இவர் லப்பர் பந்து படத்திற்கு பிறகு கெத்து தினேஷாக மாறினார். அந்தளவிற்கு அப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த ஷங்கர், தினேஷை மனதார பாராட்டியுள்ளார். லப்பர் பந்து தினேஷ் சிறப்பாக நடித்திருந்தார். அவரை போல ஒரு நடிகரை பார்க்கவே இல்லை. எந்த சாயலும் இல்லாத ஒரு நடிகர், அவரை நாம் தூக்கி வைத்து கொண்டாடவேண்டும் என்றார் ஷங்கர்.dinesh

கமல், ரஜினி, அர்ஜுன், விஜய் என சிறப்பான நடிகர்களை வைத்து படமெடுத்த இயக்குனராக ஷங்கர் ஒரு நடிகரை இந்தளவிற்கு பாராட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. அந்தளவிற்கு தினேஷின் நடிப்பு லப்பர் பந்து படத்தில் இருந்துள்ளது என்றே அர்த்தம். ஷங்கர் சொன்னதை போல தினேஷை தமிழ் சினிமா ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story