உயிரோடிருக்கும் பிரபல நடிகரை இறந்ததாக கூறியதால் அதிர்ச்சி. நலமுடன் இருப்பதாக விளக்கம்!

உயிரோடிருக்கும் பிரபல நடிகரை இறந்ததாக கூறியதால் அதிர்ச்சி. நலமுடன் இருப்பதாக விளக்கம்!

தான் இறந்ததாக செய்தி வெளியானதால் அதிர்ச்சியடைந்தாக லொள்ளு சபா மாறன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் நடிகர் மாறன். அதன்பிறகு ‘குருவி’, டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள ‘அசார்பட்டா பரம்பரை’ ப்ளு சட்டை மாறனின் ‘ஆன்ட்டி இந்தியன்’ ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார்.

உயிரோடிருக்கும் பிரபல நடிகரை இறந்ததாக கூறியதால் அதிர்ச்சி. நலமுடன் இருப்பதாக விளக்கம்!

கொரானா பாதிக்கப்பட்டிருந்த நடிகர் மாறன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் மாறன் இறந்ததாக புகைப்படத்துடன் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை பார்த்த மாறன் அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ள மாறன், தான் நன்றாக இருப்பதாகவும், அதேபோன்று மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். கொரானா தொற்று மிகவும் ஆபத்தானது என்று கூறிய அவர், அதிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். மாறன் என்று ஒரே மாதிரியாக பெயர் இருப்பதால் வந்த குழப்பம் என்று கூறப்படுகிறது.

Share this story