‘லவ் டுடே’ இந்தி ரீமேக்.. மறுப்பு தெரிவித்த போனி கபூர் !

love today hindi remake rumours boney kapoor explain

‘லவ் டுடே’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக வந்த தகவலுக்கு போனி கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் தமிழில் வெளியான திரைப்படங்களில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்கால காதலை பேசிய இப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வசூலையும் வாரி குவித்தது. இந்த வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. 

love today hindi remake rumours boney kapoor explain

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வரவேற்பை பெற்றதால் இந்த படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தை ‘துணிவு’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் கசிந்தது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் டேவிட் தவான் இயக்கவுள்ளதாகவும், வருண் தவான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

love today hindi remake rumours boney kapoor explain

இந்நிலையில் ‘லவ் டுடே’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாக வந்த தகவலுக்கு போனி கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நான் ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்கு முரனானது என்று கூறியுள்ளார். 

 

Share this story