அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகும் லப்பர் பந்து பட நடிகை!

swasika

சூரிக்கு அக்காவாக நடிக்க ஸ்வாசிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.‘கருடன்’ படத்துக்குப் பிறகு சூரி நடித்து வரும் படம் ‘மாமன்’. இதன் படப்பிடிப்பு திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சூரிக்கு அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்வாசிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய மகனுக்கும், சூரிக்கும் இடையேயான பாசப் போராட்டமே படத்தின் கதைகளம். ஆகையால் படத்துக்கு ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளார்கள்.swasika

இதில் சூரிக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்து வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தையும் திருச்சியிலேயே பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘மாமன்’ படத்தை முடித்துவிட்டு, ‘செல்ஃபி’ இயக்குநர் மதிமாறன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சூரி.

Share this story