மம்மூட்டி- மோகன்லாலை இயக்கும் வாய்ப்பு.. பசில் ஜோசப்புக்கு கிடைத்த ஜாக்பாட்...!
1737450178215
மலையாளத்தில் வெளியான கோதா, மின்னல் முரளி உட்பட சில படங்களை இயக்கிய பசில் ஜோசப், நடித்தும் வருகிறார். ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் இவர் நடிப்புப் பேசப்பட்டது. இந்நிலையில் இவர் அடுத்து இயக்கும் படத்தில் மோகன்லாலும் மம்மூட்டியும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “கொஞ்ச காலம் நடிப்பை விட்டுவிட்டு படம் இயக்க இருக்கிறேன். ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கியிருக்க வேண்டும். என் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்பதால், உடனடியாக ஆரம்பிக்கவில்லை. மம்மூட்டி- மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் பற்றிக் கேட்கிறார்கள். அது சரியான நேரத்தில் நடக்கும்” என்றார்.

