மீண்டும் படப்பிடிப்பை தொடங்குகிறாரா மணிரத்னம் ?... ‘பொன்னியின் செல்வன் 2’ குறித்து அதிர்ச்சி தகவல் !

ps 2

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மொழிகளை கடந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா இணைந்து தயாரித்துள்ளது. 

ps 2

இந்த படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யாவும், ஆதித்ய கரிகால சோழனான விக்ரமும், குந்தவையாக திரிஷாவும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியதேவனாக கார்த்தியும் நடித்து அசத்தியிருந்தனர். அதேபோன்று சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் அவரவர் கதாபாத்திரங்களில் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தனர்.  

ps 2

இரு பாகங்களாக உருவாகி வந்த இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாம் பாகத்திற்காக சில காட்சிகளை மணிரத்னம் எடுக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பை விரைவில் மணிரத்னம் துவக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story