'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவார். இந்த இரண்டு படத்திலும் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட்டானது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக சில மாதங்களுக்கு முன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதன்படி செல்வராகவன் இயக்கும் 'மெண்டல் மனதில்' எனும் புதிய திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கிறார்.இதில் மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைக்கவும் உள்ளார்.
#MentalManadhil shoot kicks off with a blessed pooja ceremony. Stay tuned for exciting updates! ✨
— Parallel Universe Pictures (@ParallelUniPic) December 22, 2024
A @gvprakash starrer & musical 🌟🎶
A @selvaraghavan film 🎬@gdinesh111 @it_is_madhuri @Arunkrishna_21 @RVijaimurugan @proyuvraaj pic.twitter.com/GwrYD0u3U4
இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜிவி பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று பூஜையுடன் படபிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. கடைசியாக செல்வராகவன் நடிப்பில் சொர்க்கவாசல் படம் வெளியாகி இருந்தது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைந்த பாடல்கள் ஹிட் ஆகின.