“ஆனந்த யாழை மீட்டுகிறாய்” மகளின் கைப்பிடித்து நடந்து செல்லும் யுவன்.. வைரலாகும் பாச வீடியோ !

“ஆனந்த யாழை மீட்டுகிறாய்”  மகளின் கைப்பிடித்து நடந்து செல்லும் யுவன்.. வைரலாகும் பாச வீடியோ !

தனது மகளின் கைப்பிடித்து நடந்து செல்லும் இசையமைப்பாளர் யுவனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

“ஆனந்த யாழை மீட்டுகிறாய்”  மகளின் கைப்பிடித்து நடந்து செல்லும் யுவன்.. வைரலாகும் பாச வீடியோ !

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும், தமிழ் பட உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தை போன்று தமிழ் திரையுலகில் இவருக்கென்று தனி இடம் உண்டு. யுவனின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு யுவனின் இசை மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.

“ஆனந்த யாழை மீட்டுகிறாய்”  மகளின் கைப்பிடித்து நடந்து செல்லும் யுவன்.. வைரலாகும் பாச வீடியோ !

சினிமாவில் பல சாதனைகள் படைத்து வரும் யுவன், கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். யுவன் என்ற பெயரை மாற்றி அப்துல் காலிக் என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு ஃப்ரூன் நிஸார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஸியா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. சினிமாவில் பிசியாக இருந்தாலும், தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் யுவன். தான் குடும்பத்துடன் இருக்கும் அழகிய தருணங்களை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

“ஆனந்த யாழை மீட்டுகிறாய்”  மகளின் கைப்பிடித்து நடந்து செல்லும் யுவன்.. வைரலாகும் பாச வீடியோ !

இதற்கிடையே ராம் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘தங்கமீன்கள்’. அப்பா-மகள் உறவை பேசும் அழகான படமான இப்படத்திற்கு யுவன்தான் இசையமைத்திருந்தார். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் எழுத்துக்களில் ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியிருந்தார். இந்நிலையில் யுவன் தனது மகளின் கையை பிடித்து கொண்டு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அவர் இசையமைத்த ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் வரிகள் ஒலிக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story