“நானே வருவேன்” டைட்டிலை வெளியிட்ட செல்வராகவன்

“நானே வருவேன்” டைட்டிலை வெளியிட்ட செல்வராகவன்

தனுஷ், செல்வராகவன் இணையும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

துள்ளுவதோ இளமை மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை,மயக்கம் என்ன உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.இதனால் தனுஷ், செல்வராகவன் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு.

“நானே வருவேன்” டைட்டிலை வெளியிட்ட செல்வராகவன்

கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்.ஜி.கே சரியாக ஓடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷை வைத்து புதிய படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார் செல்வராகவன். செல்வராகவனின் 12வது படமாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து இன்று டைட்டில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ‘நானே வருவேன்’ டைட்டில் கொண்ட போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டரில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதேபோன்று நடிகர் தனுஷ்-ம் தனது ட்விட்டரில் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நானே வருவேன் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Share this story