என் உயிர், உலகம் எல்லாமே நீதான்... நயன்தாரா பிறந்தநாளில் உருகும் விக்னேஷ் சிவன் !

nayanthara

என் உயிர், உலகம் எல்லாமே நீதான் என மனைவி நயன்தாரவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

nayanthara

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளில் நடித்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

nayanthara

இந்நிலையில் தனது காதல் மனைவிக்கு உருகி உருகி வாழ்த்து கடிதம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உன்னுடன் கொண்டாடும் 9வது பிறந்தநாள் இது.  ஒவ்வொரு வருடமும் உன்னுடைய பிறந்தநாள் சிறப்பாகவே இருக்கும் என்றாலும், இந்த வருடம் ஸ்பெஷலான பிறந்தநாளாக இருக்கிறது. ஏனென்றால் இந்த வருடம் கணவன் மனைவியாக, இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக உன் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். 

nayanthara

இத்தனை வருடங்களில் உன்னை போல் ஒரு அழகான பெண்ணை நான் பார்த்ததே இல்லை. உன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் எப்போதும் இருக்க வேண்டும். தற்போது நமது வாழ்க்கை அழகாகவும் திருப்திகரமாகவும் இருக்கிறது. மை டியர் பொண்டாட்டி, தங்கமே, எப்போதும் என் உயிர் உலகம் எல்லாம் நீதான் ஐ லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார். தனது காதல் மனைவிக்கு உருகி உருகி விக்னேஷ் சிவன்  பிறந்தநாள் வாழ்த்து சொன்னதது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

Share this story