'உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே'... ஷாருக்கானுக்கு வாழ்த்து சொன்ன உலகநாயகன் !

pathan

'பதான்' வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான்.  கடைசியாக 'ஜீரோ' படத்தில் நடித்திருந்தார்.  அதன் பிறகு 4 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 'பதான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

pathan

இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுதும் இந்த படம் 7500க்கு மேற்பட்ட திரைப்படங்களில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் இந்த படத்தில் இடம்பெற்ற பேஷ்ராம் பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப் பாடலை நீக்காவிட்டால் படத்தை வெளியிட மாட்டோம் என இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. 

pathan

ஆனால் இந்த எதிர்ப்புக்களை எல்லாம் மீறி 'பதான்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 'பதான்' படத்தின் வெற்றிக்கு நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் பதான் குறித்து நல்ல விமர்சனங்களை கேட்டு வருகிறேன். பதான் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இது படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது. 


 

Share this story