அடிதூள்... நாளை வெளியாகும் ‘பத்து தல’ முக்கிய அறிவிப்பு !

pathu thala

 சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு சுரேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். 

pathu thala

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

pathu thala

தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story