“என்னை ஆன்ட்டி என்று அழைத்தார்கள்”… உடல் எடைக்காக வந்த விமர்சங்கள் குறித்து மனம் திறந்த ப்ரியாமணி!

“என்னை ஆன்ட்டி என்று அழைத்தார்கள்”… உடல் எடைக்காக வந்த விமர்சங்கள் குறித்து மனம் திறந்த ப்ரியாமணி!

நடிகை ப்ரியாமணி தமிழில் பிரபல நடிகையாக இருந்தவர். பாரதிராஜா இயக்கத்தில் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான ப்ரியாமணி. அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அந்தப் படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.

அதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் சில படங்களில் நடித்தார். பின்னர் ப்ரியாமணி உடல் பருமன் கூடியதால் பட வாய்ப்புகளை இழக்க ஆரம்பித்தார். துணைக் காப்பாத்திரங்களில் கூட நடித்து வந்தார்.

“என்னை ஆன்ட்டி என்று அழைத்தார்கள்”… உடல் எடைக்காக வந்த விமர்சங்கள் குறித்து மனம் திறந்த ப்ரியாமணி!

அதையடுத்து அவருக்கு பேமிலி மேன் வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சுச்சி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பேமிலி மேன் இரண்டாம் பாகத்திலும் ப்ரியாமணி கதாபாத்திரம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது ப்ரியாமணி அதுகுறித்து மனம் திறந்துள்ளார்.

“என்னுடைய உடல் எடை அதிகரித்த பிறகு பலர் என்னை குண்டு மற்றும் ஆண்டி(Aunty) என்றெல்லாம் அழைக்கத் தொடங்கினார்கள். அதையடுத்து நான் கடினமாக உழைத்து உடல் எடையைக் குறைத்தேன். ஆனால் மக்கள் குறை கூறுவதை நிறுத்தவில்லை. நான் அதிக உடல் எடையுடன் இருப்பதாகவே கூறினர்.

நீ கருப்பாக இருக்கிறாய். இருட்டைப் போல அடர்நிறத்துடன் இருக்கிறாய் என்று அழைப்பர். கருப்பாக இருப்பது அழகு தான். கருப்பாக இருக்கும் ஒரே காரணத்திற்காக இருவரை தரம் தாழ்த்தி பேசாதீர்கள். ஏனென்றால் கருப்பு அழகு” என்று தெரிவித்துள்ளார்.

Share this story