இந்த மாத இறுதிவரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் – ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு!

இந்த மாத இறுதிவரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் – ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு!

இந்த மாத இறுதிவரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரானாவின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்து வருகிறது. கொரோனா 2வது அலையை சமாளிக்க முடியாமல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கட்டுபாடுகளை தீவிரமாக்க புதிய வழிமுறைகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றப்படி வேறு எந்தவித கடைகளும், நிறுவனங்களும் இயங்க அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.

இந்த மாத இறுதிவரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் – ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு!

அந்த வகையில் தற்போது சினிமா படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெப்சி தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதற்கிடையே முதலமைச்சர் ஸ்டாலினை, பெப்சி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது படப்பிடிப்பு நடத்த சரியாக வழிகாட்டுதலுடன் அனுமதிக்கவேண்டும். திரைப்பட தொழிலாளர்களுக்கு கொரோனோ நிவாரண நிதியாக 2000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.

இந்த மாத இறுதிவரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் – ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு!

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி, படப்பிடிப்புகளில் பங்கேற்கும் தொழிலாளர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை உள்ளது. அதனால் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தரவேண்டாம். பெப்சி தொழிலாளர்கள் இந்த மாத இறுதிவரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்தார். அதேநேரம் படப்பிடிப்பு இல்லாமல் தவித்து வரும் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story