இவன்தான் அந்த ‘BIKILI’ – ‘பிச்சைக்காரன்2’ படத்தின் மாஸ் அப்டேட்.

photo

பிச்சைக்காரன்2 படத்தின் வீடியோ பாடல் குறித்த அசத்தல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

photo

2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’ இந்த படத்தை சசி இயக்கியிருந்தார். இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி இந்த படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நடிகராக பிரபலமானார். அவரின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றுகூட சொல்லலாம்.

photo

இப்படி சூப்பர்ஹிட்டான  திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  8ஆண்டுகள் கழித்து தற்போது தயாராகி வருகிறது . இதிலும் விஜய் ஆண்டனிதான் ஹீரோவாக நடிக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டிகள் வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி இவன் தான் அந்த ‘BIKILI’ என ஒரு சோளக்கொல்லை பொம்மையை அறிமுகப்படுத்தி,BIKILI வீடியோ பாடம் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

photo

Share this story