சிறு கலைஞர்களுக்கும் மதிப்பளிக்கும் மனம் கொண்டவர்… ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

சிறு கலைஞர்களுக்கும் மதிப்பளிக்கும் மனம் கொண்டவர்… ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பூவையார் மற்றும் கேப்ரியாலா உடன் ஏஆர் ரகுமான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான், தெற்காசிய சுயாதீனக் கலைஞர்களின் திறமையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விதமாக ‘மாஜா’ என்ற புதிய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தத் தளத்தில் முதல் பாடலாக என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

சிறு கலைஞர்களுக்கும் மதிப்பளிக்கும் மனம் கொண்டவர்… ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அந்தப் பாடலின் இமாலய வெற்றியை அடுத்து மாஜா தளத்தில் இரண்டாவது பாடலை ஏஆர் ரஹ்மான் வெளியிட உள்ளார். ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற இந்தப் பாடலின் ஏப்ரல் 14-ம் தேதி டீசர் வெளியானது. கூடுதல் சிறப்பாக இந்தப் பாடலை ஏஆர் ரஹ்மானே இசையமைத்து பாடியுள்ளார்.

சிறு கலைஞர்களுக்கும் மதிப்பளிக்கும் மனம் கொண்டவர்… ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இந்தப் பாடலில் இளம் பாடகர் பூவையார் மற்றும் கேப்ரியெல்லா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். அதையடுத்து பூவையார் மற்றும் கேப்ரியெல்லா தனது பாடலில் பங்கெடுத்ததைத் தெரிவித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். சிறு கலைஞர்களுடன் மதிப்பளிப்பவர் என்பதை மீண்டும் ஒருமுறை ஏஆர் ரஹ்மான் நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Share this story