தயவுசெஞ்சு பாருங்க.... ரசிகர்களிடம் கெஞ்சிக் கேட்ட இயக்குநர் ரத்னகுமார்...

தயவுசெஞ்சு பாருங்க.... ரசிகர்களிடம் கெஞ்சிக் கேட்ட இயக்குநர் ரத்னகுமார்...

மேயாத மான் திரைப்படத்தின் சினிமாவிற்கு இயக்குநாரக அறிமுகமானவர் ரத்னகுமார். இப்படத்தில், வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர், இந்துஜா ஆகியோர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அமலா பால் நடிப்பில் ஆடை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படமும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. இதைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் குலுகுலு படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' படங்களின் எழுத்தாக்கத்திலும் பங்களித்திருக்கிறார். 

தயவுசெஞ்சு பாருங்க.... ரசிகர்களிடம் கெஞ்சிக் கேட்ட இயக்குநர் ரத்னகுமார்...

இந்நிலையில், இறுகப்பற்று படத்தை பார்த்த இயக்குநர் ரத்னகுமார் படம் தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தயவு செஞ்சு பாருங்க. கெஞ்சிக் கேட்டுக்குறேன் என்று பதிவிட்டிருக்கிறார். 

Share this story