‘தளபதி 65’ பட பூஜையில் கலந்துகொள்ள முடியாததால் வருத்தத்தில் இருக்கும் பூஜா ஹெக்டே!

‘தளபதி 65’ பட பூஜையில் கலந்துகொள்ள முடியாததால் வருத்தத்தில் இருக்கும் பூஜா ஹெக்டே!

‘தளபதி 65’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை அடுத்து நடிகை பூஜா ஹெக்டே அதில் கலந்துகொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் மற்றும் விஜய் கூட்டணி தளபதி 65 படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 65 என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தான் பூஜா சினிமாவில் நுழைந்தார். அதையடுத்து தற்போது டோலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தளபதி 65’ பட பூஜையில் கலந்துகொள்ள முடியாததால் வருத்தத்தில் இருக்கும் பூஜா ஹெக்டே!

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இன்று தளபதி 65 படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. பூஜையில் விஜய், நெல்சன் திலீப்குமார், அன்பறிவ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தற்போது நடிகை பூஜா ஹெக்டே, இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நான் தற்போது வேறு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருப்பதால் தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் என்னுடைய நினைவுகள் மற்றும் ஆன்மா படக்குழுவைச் சுற்றியே உள்ளது. உங்களுடன் இணைய மிக ஆவலாக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்திவிட்டு அதையடுத்து படக்குழு ரஷ்யா பறக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story