வருண் தவான் உடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே..!

varun dhawan
பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார். சென்னை, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் சூர்யாவுக்கு ஜோடியாக சூர்யா 44 படத்திலும் , விஜய்க்கு ஜோடியாக தளபதி 69 படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல், பூஜா ஹெக்டே பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படம் இதனை கிட்டத்தட்ட உறுதியாக்கி உள்ளது. அதன்படி, வருண் தவாணுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், 'இது எங்கள் படத்திற்காக இருக்கலாம்' என்று பதிவிட்டுள்ளார். இது உறுதிப்படுத்தப்பட்டால், பூஜா ஹெக்டே - வருண் தவான் முதல் முறையாக ஜோடி சேருவார்கள். வருண் தவான் தற்போது பேபி ஜான் படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

Share this story