விபத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி

விபத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி

பிரபல பாடகி சின்மயி, காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார் சின்மயி. அவர், சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று ஞாயிறு மாலை விபத்தில் சிக்கியதாக ட்விட்டர் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுடன் சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் வந்து மோதிவிட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இடித்துவிட்டு நிற்காமல் ஆட்டோ தப்பித்தும் சென்றிருக்கிறது. இருப்பினும், தாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார். 

 

Share this story