காமெடி ஜானரில் உருவாகும் ‘பேட்ட ராப்’.. பிரபுதேவா நடிக்கும் புதிய பட அறிவிப்பு !
![petta rap](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/8c5b8e7380bab085463d30e8d54554a0.jpg)
பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வருபவர் பிரபுதேவா. தற்போது பிசியான நடிகராக வலம் வரும் அவர், புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ‘பேட்ட ராப்’ என்ற பெயரில் உருவாகும் இந்த படம் கலப்பான நகைச்சுவை கலந்து உருவாகும் கமர்ஷியல் படமாகும். பிரபுதேவாவின் சூப்பர் ஹிட் படமான ‘காதலன்‘ படத்தில் வடிவேலு பாடிய புகழ்பெற்ற ‘பேட்ட ராப்’ பாடலை இந்த படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.
தேரு, ஜிபூட்டி ஆகிய படங்கள் மூலம் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.ஜே.சினு இப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிகை வேதிகா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
புளூ ஹில் ஃபிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டினில் பிகே திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்திற்கு டி இமான் இசைப்பாளராகவும், ஜித்து தாமோதர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. வரும் ஜூன் 15-ஆம் தேதி இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கவுள்ளது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.