2k கிட்ஸ்களின் வரவேற்பை பெறும் ‘லவ் டுடே’... தொடர்ந்து வசூல் மழை !

love today

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘லவ் டுடே’ திரைப்படம் வசூல் மழையில் நனைய வைத்துள்ளது. 

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸ்களின் கதைக்களம் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி முதல்முறையாக ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘லல் டுடே’. 

love today

இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2k கிட்ஸ்களின் சமகால வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. 

love today

கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலை சாதனை படைத்து வருகிறது. அதன்படி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளில் 3 கோடியாகவும், இரண்டாம் நாள் 5.35 கோடியாகவும், மூன்றாம் நாள் 6.25 கோடியாகவும் இருக்கிறது. மொத்தத்தில் இன்று வரை 14 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.  

Share this story