புஷ்பா 2 கிளைமாக்ஸ் : தியேட்டரில் சாமி ஆடிய பெண்கள்!

pushpa 2

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. புஷ்பா முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.  இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. முதல் நாளில் இந்திய அளவில் 265 கோடி வசூல் செய்த நிலையில், 'புஷ்பா 2' திரைப்படம் உலக அளவில் 294 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதன் மூலம் உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய பட வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. 



இந்நிலையில்,படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கோயிலில் அம்மன் கெட்டப்புடன் புடவையை கட்டிக் கொண்டு, ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் அல்லு அர்ஜூன். கிளைமாக்ஸில் வரும் அந்த பாடல் மெய் சிலிர்க்கும் வகையில் இருந்தது. இந்த பாடலை வெவ்வேறு தியேட்டர்களில் பார்த்துக்கொண்டு இருந்த பெண்கள் இருவர் அருள் வந்து ஆடியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை கட்டுப்படுத்திய போதும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சாமி ஆடிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

  

Share this story