‘புல்லட்’... ராகவா லாரன்ஸ் தம்பி நடிக்கும் படத்தின் தலைப்பு !
ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸி தம்பி எல்வின் ஹீரோவாக புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தம்பியுடன் இணைந்து ராகவா லாரன்ஸும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். எல்வினுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ் நடிக்கிறார்.
‘அருள்நிதி’ நடிப்பில் வெளியான ‘டைரி’ படத்தின் பிரபலமானவர் இன்னாசி பாண்டியன் இந்த படத்தை இயக்குகிறார். . இந்த படத்தில் பைவ் ஸ்டார் கிரியேஷன் நிறுவனம் சார்பில் எஸ் கதிரேசன் இந்த படத்தை தயாரிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. சென்னையில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘புல்லட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தலைப்பை கேட்டாலே படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.