ராகுல் காந்தியை சந்தித்த சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் தம்பதி

mega akash

‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேகா ஆகாஷ், அதைத்தொடர்ந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடிப்பில் இந்தாண்டு வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியானது. இதையடுத்து தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ் சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்டார். திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

இந்த நிலையில் சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் தம்பதி,  நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி உடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்ததாகக் கூறியுள்ளார்.

Share this story