மகனின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் அப்பா.. ‘விமானம்’ டிரெய்லர் வெளியீடு !
அப்பா - மகன் பாசம் குறித்து பேசும் ‘விமானம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
முதல்முறையாக நடிகர் சமுத்திரகனி மாற்றுத்தினாளியாக நடித்துள்ள திரைப்படம் விமானம். அப்பா - மகன் பாசம் குறித்து பேசும் இந்த படத்தை இயக்குனர் சிவபிரகாஷ் என்னலா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மீன், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை கே.கே.கிரியேட்டிவ் வெர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சரண் அர்ஜூன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லரில் அப்பா - மகன் பாசம் குறித்தும், விமானத்தில் போக துடிக்கும் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற போராடும் தந்தையின் பாசத்தை கூறும் படமாக உருவாகியுள்ளது. இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது.