“இந்த சோதனை காலத்திற்கு ஏற்ற ஆட்சி அமைந்ததில் மகிழ்ச்சி”… முக ஸ்டாலினுக்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து!

“இந்த சோதனை காலத்திற்கு ஏற்ற ஆட்சி அமைந்ததில் மகிழ்ச்சி”… முக ஸ்டாலினுக்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து!

தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

“இந்த சோதனை காலத்திற்கு ஏற்ற ஆட்சி அமைந்ததில் மகிழ்ச்சி”… முக ஸ்டாலினுக்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து!

தமிழகத்தில் நடந்து முடிந்த 234 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து தற்போது தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு இந்தியா முழுவதிலிமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “தமிழ்நாட்டில் அற்புதமான வெற்றியைப் பெற்ற திரு முக.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த சோதனை காலங்களில் மிகவும் இன்றியமையாத கட்சியான தோழமை கட்சிகள் வெற்றி பெறுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் செழிப்பும் கிடைக்க விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story