‘சர்தார் 2’ படம் குறித்த புது அப்டேட்!

சர்தார் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சர்தார் 2 திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மெய்யழகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியார் திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான சர்தார் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி சர்தார் 2 படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒரு பாடல் காட்சி ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது சர்தார் 2 படத்தின் டீசர் 2025 மே மாதம் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.