சத்யராஜ் படத்தின் படப்பிடிப்பில் திடீர் விபத்து... லைட்மேன் உயிரிழந்த சோகம் !

veppan

சத்யராஜின் 'வெப்பன்' படப்பிடிப்பில் திடீரென விபத்து ஏற்பட்டதால் லைட்மேன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் வசந்த் ரவியுடன் சத்தியராஜ் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'வெப்பன்'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

veppan

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர்கண்டிகையில் உள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர்.பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிற்காக சென்னை சாலிக்கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் 40 அடி உயரத்தில் மின் விளக்குகளை அமைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குமார் கால் தவறி கீழே விழுந்தார். 

இதனால் பலத்த காயமடைந்த குமார், உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து குமாரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். படப்பிடிப்பில் லைட்மேன் உயிரிழந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  

Share this story