சீமான் அரசியல் செய்வதற்கு இப்போதும் பெரியார் தேவைப்படுகிறார்... : நடிகர் பார்த்திபன்

parthiban

இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார். 

இதனிடையே அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். இந்த சந்திப்பு அவர் இயக்கவிருக்கும் புதிய படமான ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக எனக் கூறப்படுகிறது. parthiban

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு, “பெரியாரை நீக்கிவிட்டால் இங்கு அரசியல் என்பதே கிடையாது. அதனால் தான் அவரும் பெரியாரை வைத்து அரசியல் செய்கிறார். ப்ளஸ்ஸா மைனஸா என்பது வேறு. ஆனால் இப்போதும் அரசியல் செய்வதற்கு பெரியார் தேவைப்படுகிறார் அல்லவா. அப்போது அவர் எவ்வளவு பெரிய பெரியார்” என பதிலளித்தார்.

Share this story