பயத்தால் இதய துடிப்பை நிறுத்திக்கொண்டது ஏன் ? ரசிகர் மறைவுக்கு நடிகர் சிம்பு உருக்கமான பதிவு!

பயத்தால் இதய துடிப்பை நிறுத்திக்கொண்டது ஏன் ? ரசிகர் மறைவுக்கு நடிகர் சிம்பு உருக்கமான பதிவு!

கொரானாவால் ரசிகர் ஒருவர் மறைந்ததையொட்டி நடிகர் சிம்பு உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அன்பு தம்பியும் ‘காதல் அழிவதில்லை’ படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரனுமான குட்லக் சதீசை அக்காலத்தில் இழந்திருக்கிறேன். கொரானா என்றவுடன் மருத்துவ உதவிக்கெல்லாம் பேசி, நம்பிக்கையோடு மீண்டு வருவாய் என்று ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பினேனே…?!.

பயத்தால் இதய துடிப்பை நிறுத்திக்கொண்டது ஏன் ? ரசிகர் மறைவுக்கு நடிகர் சிம்பு உருக்கமான பதிவு!

அங்கு எடுத்து போகும் உடல்களைப் பார்த்ததும் பயந்தது ஏன் சகோதரா?. பயந்து உன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டது என் சகோதரா?. உன் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைக்காமல் போனதேன் சகோதரா?? துயர் கொள்கிறேன். உன்னை இழந்து விட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன்.

பயத்தால் இதய துடிப்பை நிறுத்திக்கொண்டது ஏன் ? ரசிகர் மறைவுக்கு நடிகர் சிம்பு உருக்கமான பதிவு!

நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய், போய் வா சகோதரா, அழுகையோடு அனுப்பி வைக்கிறேன்.

ரசிகர்களே.. நண்பர்களே… சகோதர சகோதரிகளே… நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலை குலையாதீர்கள். பயம் தான் நம்மை விழ்த்துகிறது, பயம் தான் நாம் நோயிலிருந்து குணமாவதைத் தடுக்கிறது. சாதாரண நோய் தீவிர நோயாக்குவதும் பயம்தான். நிலைகுலைதல் தான் இதயத்தைத் தாக்குகிறது. தயவுசெய்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம்.

பயத்தால் இதய துடிப்பை நிறுத்திக்கொண்டது ஏன் ? ரசிகர் மறைவுக்கு நடிகர் சிம்பு உருக்கமான பதிவு!

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். அதேசமயம் மனத்திடத்தையும் பெருக்கிக் கொள்வோம். தேவையான மருத்துவம் பார்ப்பதோடில்லாமல் தேவையற்று வெளியே செல்வதைத் தவிர்ப்போம். சிறப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது. பாதுகாப்பாக இருப்பதே கொரானாவை விரட்டும் மருந்து புரிந்துக்கொள்வோம்.

சகோதரன் குட்லக் சதீசை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை என்று நடிகர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this story