ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிம்புவின் புதிய படம்!

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிம்புவின் புதிய படம்!

சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நாளை ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் இருந்து விலகி இருந்த சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு உடல் எடையைக் குறைத்து ஈஸ்வரன் படத்தின் மூலம் தரமான ரீஎன்ட்ரி கொடுத்தார். ஈஸ்வரன் படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிம்புவின் புதிய படம்!

இந்தாண்டு பொங்கலுக்கு ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்றது. தமன் இசையில் மாங்கல்யம் உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

ஈஸ்வரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் நாளை (ஜூன் 12) டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை அடுத்து பத்து தல என்ற படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

Share this story