சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மறைவு.. சோகத்தில் திரையுலகம்!

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மறைவு.. சோகத்தில் திரையுலகம்!

சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் பவுன்ராஜ், மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரானாவில் 2வது அலையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் உயிரிழந்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல விஷயங்களை செய்து வருகிறது தமிழக அரசு. இருந்தாலும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. கொரானா தொற்றின் தாக்குதலால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மறைவு.. சோகத்தில் திரையுலகம்!

அதேநேரம் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கே.வி.ஆனந்த், தாமிரா, எஸ்பி ஜனநாதன் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினிமுருகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பவுன்ராஜ். இயக்குனர் பொன்ராமிடம் உதவி இயக்குனராகவும், சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் பவுன்ராஜ் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டம், உசிலம்பட்டி அருகே போதிபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story