சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' நிறுத்தமா ?... புதிய தகவலால் பரபரப்பு !

aswin

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 முதல்முறையாக தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன், ‘பிரின்ஸ்’ படத்தின் வெற்றிக்காக காத்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதனால் தனது அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்த ஆர்வம் காட்டி வருகிறார்.  

aswin

‘மாவீரன்’ என்ற தலைப்பில உருவாகும் இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு இப்படத்தில் இணைந்துள்ளார். 

aswin

பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story