பவித்ராவை அடுத்து கதிர் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை!

பவித்ராவை அடுத்து கதிர் படத்தில் இணைந்த  சிவகார்த்திகேயன் பட நடிகை!

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா கதிர் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

தற்போது இந்தப் படத்தில் நடிகை ஆத்மியா ராஜனும் இணைந்துள்ளார். இவர் சிவகார்த்திகேயன் உடன் ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் நடித்திருந்தார்.

பவித்ராவை அடுத்து கதிர் படத்தில் இணைந்த  சிவகார்த்திகேயன் பட நடிகை!

நடிகை ஆனந்தியும் கதிர் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தை அடுத்து இவர்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். மலையாள இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

பவித்ராவை அடுத்து கதிர் படத்தில் இணைந்த  சிவகார்த்திகேயன் பட நடிகை!

“நாங்கள் ஒரு புதிய முகத்தை நடிக்க வைக்க விரும்பினோம், பவித்ரா லட்சுமி இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று நினைத்தோம். அவர் படத்தில் கதிரின் ஜோடியாக நடிக்கிறார் மற்றும் அவரது பகுதிகளுக்கான படப்பிடிப்பு துவங்கிவிட்டது. ஆத்மியா ஒரு துப்பறியும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அவரது கதாபாத்திரம் படம் முழுவதும் பயணிக்கும்.” என்று இயக்குனர் தெரிவித்த .

இந்த படத்தில் நரேன், நட்டி, வினோதினி, ஜான் விஜய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கதிர் இந்தப் படத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதே நேரத்தில் நரேன் ஒரு துப்பறியும் நபராகவும் நடிக்கிறார். நாட்டி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.” என்று இயக்குனர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this story