SK 25 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK 25 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனையடுத்து, சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
#பராசக்தி #Parasakthi
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 29, 2025
Tamil title teaser - https://t.co/ne1Vbz7gl3#SK25 pic.twitter.com/OGXc2n5D1z
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படத்தின் பெயர் பராசக்தி என்பது குறிப்பிடத்தக்கது.