சுந்தர் சி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. ‘ஒன் டு ஒன்’ படத்தின் முக்கிய அப்டேட் !

Neetu Chandra

 சுந்தர் சியின் ‘ஒன் டு ஒன்’ படத்தின் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனரான சுந்தர் சி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஒன் 2 ஒன்’. இந்த படத்தை திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ படத்தை இயக்கிய திருஞானம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராகினி திரிவேதி நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்து வருகிறார். 

Neetu Chandra

மேலும் இந்த படத்தில் விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார். 24 ஹவர்ஸ் பிரொக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. 

Neetu Chandra

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நீது சந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவான், சிங்கம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story