ஜார்ஜியாவில் ஓரிரு ‌நாட்களில் ஷூட்டிங்கை முடிக்க திட்டம்‌… சென்னை திரும்புகிறது “விஜய் 65” படக்குழு…

ஜார்ஜியாவில் ஓரிரு ‌நாட்களில் ஷூட்டிங்கை முடிக்க திட்டம்‌… சென்னை திரும்புகிறது “விஜய் 65” படக்குழு…

ஜார்ஜியாவில் நடக்கும் விஜய் 65′ படத்தின் ஷூட்டிங்கை ஓரிரு ‌நாட்களில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

ஜார்ஜியாவில் ஓரிரு ‌நாட்களில் ஷூட்டிங்கை முடிக்க திட்டம்‌… சென்னை திரும்புகிறது “விஜய் 65” படக்குழு…

நடிகர் விஜய் – இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் விஜய் ரா ஏஜென்ட் கேரக்டரில் நடிக்க உள்ளது படத்தின் மீதான விறுவிறுப்பை கூட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஜார்ஜியாவில் ஓரிரு ‌நாட்களில் ஷூட்டிங்கை முடிக்க திட்டம்‌… சென்னை திரும்புகிறது “விஜய் 65” படக்குழு…

இந்த படத்தின் ஷூட்டிங் தேர்தல் முடிந்த அடுத்த நாளே ஜார்ஜியாவில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஷூட்டிங் 16 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது படமாக்கவேண்டிய சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டது. இதற்காக சுமார் 100 பேர் வரை படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஜார்ஜியாவில் ஓரிரு ‌நாட்களில் ஷூட்டிங்கை முடிக்க திட்டம்‌… சென்னை திரும்புகிறது “விஜய் 65” படக்குழு…

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என தகவல் கசிந்துள்ளது. அதன்பிறகு அடுத்த சில நாட்களில் படக்குழு சென்னை திரும்ப உள்ளது. இதையடுத்து சென்னையில் ஏற்கனவே திட்டமிட்டபடி பாடல்களுக்கான ரிகர்சலை படக்குழு தொடங்கவுள்ளது. பின்னர் பாடல்களுக்கான படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Share this story