போடு வெடிய……- ‘தங்கலான்’ டீசர் படைத்த சாதனை.

photo

சியான் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் 24 மணி நேரத்திற்குள்ளாகவே 5மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

photo

சியான் விக்ரம், பா. ரஞ்சித் முதல் முறையாக கூட்டணி அமைத்து தயாராகியுள்ள படம் ‘தங்கலான’. கேஜிஎப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மிரட்டும் விதமாக விக்ரமின் தோற்றம் இந்த படத்தில் அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் கதை நகர்வதால் படத்திற்காக படக்குழு நிறைய மெனக்கெடல்களை செய்துள்ளது டீசரில் நன்கு தெரிகிறது.


 

இந்த நிலையில் ஆக்ஷன் அதிரடியில் தயாரான தங்கலான் படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாகவே டீசர் 5மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Share this story