சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படப்பிடிப்பு நிறைவு…

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் சந்தானம் தற்போது தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். ஏற்கனவே நடிகர் சந்தானம், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய காமெடி கலந்த ஹாரர் திரில்லர் படங்களில் நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
எனவே அடுத்ததாக நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் சந்தானம் நடித்துவரும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. டிடி நெக்ஸ்ட் லெவல் – டெவில்ஸ் டபுள் என்ற இந்த படத்தின் டைட்டிலை பார்க்கும்போதே டிடி ரிட்டன்ஸ் படத்தை விட இந்த படத்தில் திரில்லரும் காமெடியும் இரண்டு மடங்காக இருக்கும் போல் தெரிகிறது.
மேலும் இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து கௌதம் மேனன், செல்வராகவன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை டிடி ரிட்டன்ஸ் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அடுத்தது இந்த படம் 2025 மே மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.