வேண்டுமென்றே வைத்த பெயரல்ல… சீமானிடம் பேசிய பார்த்திபன் !

வேண்டுமென்றே வைத்த பெயரல்ல… சீமானிடம் பேசிய பார்த்திபன் !

துக்ளக் தர்பார் படத்தில் சில காட்சிகளை நீக்கக்கோரிய நிலையில் சீமானிடம் விளக்கம் அளித்தார் பார்த்திபன்.

தில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் துக்ளக் தர்பார். இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்துள்ளன.

வேண்டுமென்றே வைத்த பெயரல்ல… சீமானிடம் பேசிய பார்த்திபன் !

காமெடி கலந்த அரசியல் படமாக வெளிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விஜய் சேதுபதி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வேண்டுமென்றே வைத்த பெயரல்ல… சீமானிடம் பேசிய பார்த்திபன் !

இந்த டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதில் இடம்பெற்றிருந்த ராகுமான் என்ற கதாபாத்திரம் தங்கள் தலைவர் மாதிரியே சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், டீசரில் காட்டப்பட்டுள்ள போஸ்டரை கிழிக்கும் காட்சிகள் மிகுந்த மனவேதனையை அளித்ததாகவும் கூறியிருந்தனர்.

வேண்டுமென்றே வைத்த பெயரல்ல… சீமானிடம் பேசிய பார்த்திபன் !

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினார்.தான், நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி,ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.

Share this story