‘நாய் சேகர்’ நிறுத்தமா ?.. தீயாய் பரவும் தகவலால் வேதனையடைந்த வடிவேலு !
நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் லைக்கா தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நாய்களுடன் வடிவேலு இருப்பது படத்திற்கான எதிர்பார்பை கூட்டியிருந்தது.
இதற்கிடையே ‘மாமன்னன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இந்நிலையில் நாய் படத்தின் பணிகள் சில பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டுள்ளதாக சோஷியல் மீடியாவில் தீயாய் தகவல் ஒன்று பரவி வருகிறது. இதையறிந்த வடிவேலு எப்படியெல்லாம் கிளப்பி விடுகிறார்கள் என்று சொல்லி நண்பர்களிடம் வேதனைப் பட்டிருக்கிறார். இதிலிருந்து ‘நாய் சேகர்’ படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக தெரிகிறது.