நாங்க வேற மாறி... யுவனின் துள்ளலான இசையுடன் வெளியானது 'வலிமை' படத்தின் முதல் பாடல்!

valimai-fs

'வலிமை' படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி பாடல் வெளியாகியுள்ளது.   

அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் அந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.  

valimai-fs-4

வலிமை படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் மேலு சில போஸ்டர்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பு பெற்றன.  இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், ஸ்பெஷல் போஸ்டர்கள் என உற்சாகத்தில் உறைய வைத்தனர் படக்குழுவினர். 

valimai

 பின்னர் வலிமை படத்தின் முதல் பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியது. இந்நிலையில் வலிமை படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி தற்போது வெளியாகியுள்ளது. யுவனின் துள்ளலான இசையில் யுவன் மற்றும் அருண்ராக் குல்கர்னி குரலில் துடிப்பான பாடலாக.அமைந்துள்ளது. பாடல் வெளியாகி சில நிமிடங்களே ஆன நிலையில் அஜித் ரசிகர்கள் அடுத்த சாதனைக்குதயாராகி விட்டனர். ஏற்கனவே கோலிவுட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை நாங்க வேற மாறி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

Share this story