அஜித் இல்லாமல் தொடங்கிய ‘வலிமை’ படப்பிடிப்பு!

அஜித் இல்லாமல் தொடங்கிய ‘வலிமை’ படப்பிடிப்பு!

கொரோனாவால் தடைபட்டிருந்த ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங், நேற்று முதல் தொடங்கியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. 60 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காத்திருந்தனர்.

அஜித் இல்லாமல் தொடங்கிய ‘வலிமை’ படப்பிடிப்பு!

சில விதிமுறைகளுடன் படப்பிடிப்பு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், சென்னை மீஞ்சுரில் நேற்று (புதன்கிழமை) படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் யாரும் இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகின்றனர். விரைவில் சென்னையிலேயே அரங்குகள் அமைத்து மீதமுள்ள காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர். இதற்கான அரங்குகள் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

அஜித் இல்லாமல் தொடங்கிய ‘வலிமை’ படப்பிடிப்பு!

பொதுவாக, தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால் கூட்டம் சேர்ந்துவிடும், கதை லீக்காகிவிடும் என்று சொல்லி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்துவது அஜித் தரப்பின் வழக்கம். இந்தப் படத்தின் ஷூட்டிங் கூட அங்குதான் தொடங்கியது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக தற்போது சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு அஜித் தரப்பு ஆளாகியுள்ளது.

கூட்டம் சேராமல், கதை லீக் ஆகாமல் எப்படி படப்பிடிப்பை நடத்தப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்…

Share this story