மிரட்டலான ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கும் வரலட்சுமி... ‘வி3’ டிரெய்லர் வெளியீடு !

v3

 வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘வி3’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகையான வரலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘வி3’. இந்த படத்தில் வித்தியாசமான ஐஏஎஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தை அமுதவாணன் என்பவர் இயக்கி வருகிறார். மூன்று விஷயங்களை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. அதாவது ‘வி 3’ என்றால் விந்தியா, விக்டீம், விர்ட்டீட் என்று பொருளாகும். 

இந்த படத்தில் வரலட்சுமியுடன் இணைந்து பாவனா கெளடா, எஸ்தர் அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அலென் ஜெபஸ்டின் இசையில் உருவாகி வரும் இப்பட​த்தை டீம் ஏ வென்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளத. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் உணர்வை மைப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

 

Share this story