ரசிகர்கள் எதிர்பார்த்த ‘வாரிசு’ டிரெய்லர்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

varisu

 விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கியுள்ளார். முதல்முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாகிறார். 

varisu

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஷ், ஷாம், குஷ்பூ, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படம் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story