வீர தீர சூரன் பட இயக்குநர் அருண் குமார் திருமணம்.. பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

arun

சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சித்தா, வீர தீர சூரன் என பல படங்களை இயக்கியுள்ள இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார் திருமணம் இன்று நடைபெற்றது.  

பண்ணையாரும் பத்மினியும் படத்தை 2014ம் ஆண்டு இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் அருண் குமார். நாளைய இயக்குநர் காலத்தில் இருந்தே விஜய் சேதுபதியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக இருவரும் இணைந்து பணியாற்றினர். பண்ணையாரும் பத்மினியும் படம் முடிந்த நிலையில், மீண்டும் இருவரும் சேதுபதி படத்திலும் இணைந்தனர். இதே கூட்டணி சிந்துபாத் படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சரியாக போகவில்லை. சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் அருண் குமாருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சியான் விக்ரமை வைத்து வீர தீர சூரன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார். 2ம் பாகம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

arun

 

இந்நிலையில்,  இயக்குநர் அருண் குமாருக்கு இன்று  திருமணம் நடைபெற்றது.  திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவரது திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று இயக்குநரையும் அவரது மனைவியையும் வாழ்த்தியுள்ளனர். சியான் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், இயக்குநர் விக்னேஷ் சிவன், எஸ்.ஜே. சூர்யா, நடிகை துஷாரா விஜயன் என பலரும் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா என வீர தீர சூரன் டீம் மொத்தமும் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this story