‘வீர தீர சூரன்- பாகம் 2’ படத்தின் புகைப்படங்கள் வைரல்!

vikram

வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வீர தீர சூரன் பாகம் 2. விக்ரமின் 62 ஆவது படமாகும். இந்த படத்தினை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி வருகிறார்.'வீர தீர சூரன்- பாகம் 2' படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!இந்த படத்தில் விக்ரம் தவிர எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சித்திக், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

vikram

ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் இருந்து டீசரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

vikram

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த படத்தை ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.vikram

Share this story